தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் சுமார் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனி பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து திமுக கூட்டணி 59 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பினார்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. மேலும் புதிய அரசு அமையும் வரை காபந்து அரசின் முதலமைச்சராக தொடர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.







