அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களை பெற்றுள்ளன. திமுக தனித்து 60 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று உள்ளது. ஆனால் தனியாக 47 இடங்களை மட்டும் பெற்ற அதிமுக-வுக்கு இந்த முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை பெற்ற அதிமுக அதன் பிறகு நடந்த 2021 மற்றும் 2026 தேர்தல்களில் ஆட்சி கட்டிலுக்கு அருகில் நெருங்க முடியவில்லை. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 66 இடங்களில் வென்ற அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால் விஜயின் வருகையால் இந்த முறை அதிமுக மூன்றவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்த்தப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.