இசையால் அனைவரையும் கட்டிப்போட்ட “லிடியன்”

44-வது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா மேடையில், லிடியன் பியானோ வாசித்து அசத்தினார். அதனைப் பார்த்த வெளிநாட்டினர் பலரும் அவரின் வாசிப்பு திறமையைப் பார்த்து வியந்து போனார்கள். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை…

44-வது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா மேடையில், லிடியன் பியானோ வாசித்து அசத்தினார். அதனைப் பார்த்த வெளிநாட்டினர் பலரும் அவரின் வாசிப்பு திறமையைப் பார்த்து வியந்து போனார்கள்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதில், நடனம், இசைக் கச்சேரி, மணல் ஓவியம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை மாலை தொடங்குகின்றன. அதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடந்தது. பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்ய நாதன், நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பட்டு வேட்டி சட்டையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

அண்மைச் செய்தி: ‘இந்திய அணி ஆடும் செஸ் காயைத் தேர்ந்தெடுத்த பிரதமர்’

விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, போட்டியில் பங்கேற்கும் 186 நாடுகளின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் தலா 2 வீரர்கள் தங்களின் தேசியக்கொடியை ஏந்தியவாறு அணிவகுத்துச் சென்றனர். அப்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் பெயர்ப் பலகையை ஏந்தியவாறு வீறு நடைபோட்டனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில், இந்தியாவின் பாரம்பரிய நடனங்களும் அரங்கேற்றப்பட்டன. பரதநாட்டியம், கதக், மோகினி ஆட்டம், குச்சிப்புடி என அடுத்தடுத்து பல நடன நிகழ்ச்சிகள் அரங்கேறின. இந்த நிலையில் மேடையில் இன்று லிடியன் பியானோ வாசித்து அசத்தினார். தொடக்கத்தில் லிடியன் கண்ணைக் கட்டிக்கொண்டு நாதஸ்வரம் வாசித்தார். பின்னர் இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் இரண்டு பியானோ வாசித்தார். தொடக்கத்தில் மெதுவாக வாசித்தவர் அப்படியே நேரம் செல்ல செல்ல வேகத்தைக் கூட்டினார். இவர் வாசித்ததைப் பார்த்தது அங்கு அமர்ந்து இருந்தவர்கள் பலரும் மெய் சிலிர்த்துப் போனார்கள். ரஜினி, கார்த்தி ஆகியோரும் இதைப் பார்த்து வியந்து போனார்கள். அதேபோல், நிகழ்ச்சியில் பங்கேற்ற மணல் ஓவியக் கலைஞர் சர்வம் பட்டேல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியின் உருவப்படங்களை மணலில் வரைந்து அசத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.