முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் சொகுசு கப்பலை தொடங்கும் முதலமைச்சர்

சென்னை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சொகுசு கப்பல் சேவையை வரும் 4ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கவரும் வகையில், கோர்டெலியா குரூசிஸ் நிறுவனம் சொகுசு கப்பலை உருவாக்கியுள்ளது. கோர்டெலியா குரூசிஸ் சொகுசு கப்பலில்​​உணவகங்கள், நீச்சல் குளம், பார், திறந்தவெளி சினிமா திரையரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, ஜிம்னாசியம் போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் வரை முதற்கட்டமாக வாரத்தில் இரண்டு நாட்கள் பயணிகளை ஏற்றிச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத்திட்டமும் தொடங்கப்படவுள்ளது. இந்த தனியார் சொகுசு கப்பல் மூலம்  சுற்றுலா திட்டத்திற்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு வழங்குவதோடு வரும் ஜூன் 4ம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கப்பலின் முதல் பயணத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவின் விதிகளை பின்பற்றுங்கள்: கூகுள், முகநூலுக்கு நாடாளுமன்ற குழு அறிவுறுத்தல்

Halley Karthik

மருத்துவமனையில் ரஜினியிடம் உடல் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

Halley Karthik

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு

Saravana Kumar