முக்கியச் செய்திகள் இந்தியா

2024 தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் சோனியா

காங்கிரஸ் 2024 தேர்தல் பணிக்குழுவில் ஆலோசகர்களாக மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ என்ற மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இத்தகைய மாநாடு நடைபெற்றது. அப்போது கட்சியை புதுப்பிப்பதற்கான பல்வேறு உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், 2024 பொதுத் தேர்தலையொட்டி, இரு குழுக்களை காங்கிரஸ் அமைத்துள்ளது. முதலாவது குழு 2024 தேர்தலுக்கான பணிக் குழுவாகும். இரண்டாவது குழு அரசியல் ஆலோசனைக் குழுவாகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குலாம் நபி ஆசாத்

இத்தகைய குழுக்கள் அமைக்கப்படும் என்று உதய்பூர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியிருந்தார். அதன்படி அந்தக் குழுக்கள் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டன. குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் 8 பேர் கொண்ட அரசியல் ஆலோசனைக் குழுவில் உள்ளனர். 8 பேர் குழுவில் ராகுல் காந்தி, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் மற்றும் ஜிதேந்திர சிங் உள்ளனர். இந்தக் குழுவானது இறுதி மற்றும் கூட்டு முடிவெடுக்கும் ஆலோசனை மன்றமாக காங்கிரஸ் காரிய கமிட்டி உடன் இருக்கும். இந்தக் குழுவை அமைக்க சோனியா ஒப்புக்கொண்டார். இந்த 8 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா, ரண்தீப் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், அஜய் மாக்கன் மற்று்ம சுனில் கனுகோலு களமிறக்கப்பட்டுள்ளனர்.

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தில் இருந்தவரான கனுகோலுவை தேர்தல் பணிகள் குழுவில் காங்கிரஸ் சேர்த்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமைப்பு, தகவல்தொடர்பு மற்றும் ஊடகம், நிதி, தேர்தல் மேலாண்மை என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பணி ஒதுக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 2 முதல் மேற்கொள்ளப்படவுள்ள பாத யாத்திரைக்கான 9 பேர் கொண்ட மத்திய திட்டக் குழுவையும் காங்கிரஸ் அமைத்தது. இந்தக் குழுவுக்கு மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் தலைமை வகிக்கவுள்ளார். மேலும், இந்தக் குழுவில் சச்சின் பைலட், சசி தரூர், ரவ்ணீத் சிங் பிட்டு ஆகியோரும் உள்ளனர். 6 மாதங்களில் 12 மாநிலங்களில் சுமார் 3,500 கி.மீ. தொலைவை கடக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் பலி!

Vandhana

வெள்ள பாதிப்புகள் ஆய்வு; நாளை சென்னை வருகிறது 7 பேர் கொண்ட மத்திய குழு

Halley Karthik

பெரியகுளத்தில் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்!

Jeba Arul Robinson