நடிகர் கார்த்திக்கு Common DP வெளியிட்ட பிரபலங்கள்!

நடிகர் கார்த்தியின் 45வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவருக்கான சிறப்பு common dp உருவாக்கப்பட்டு பிரபலங்களால் வெளியிடப்பட்டுள்ளது. செல்வராகவன், லோகேஷ் கனகராஜ், பாண்டிராஜ், ஜி.வி.பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி, ப்ரியா பவானி சங்கர்,…

நடிகர் கார்த்தியின் 45வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவருக்கான சிறப்பு common dp உருவாக்கப்பட்டு பிரபலங்களால் வெளியிடப்பட்டுள்ளது. செல்வராகவன், லோகேஷ் கனகராஜ், பாண்டிராஜ், ஜி.வி.பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி, ப்ரியா பவானி சங்கர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கார்த்திக்கான common dp-ஐ வெளியிட அவரது ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த common dp-யில் மெட்ராஸ் படத்தின் சுவர், கைதி படத்தின் லாரி , கடைக்குட்டி சிங்கத்தின் ஏர் கலப்பை, பையா கார், காற்று வெளியிடையின் flight உள்ளிட்டவகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் HDBkarthi-யுடன் uzhavanday எனும் ஹாஷ் டேக்குகளையும் அவரின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கார்த்தியின் சகோதரர் சூர்யா அகரம் கட்டளையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கான கல்விக்கு உதவுவது போலவே விவசாயிகள் தொடர்பான நற்காரியங்களை செய்ய கார்த்தியால் உருவாக்கப்பட்டது தான் உழவன் ஃபவுண்டேஷன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த அறக்கட்டளை மூலம் சிறந்த 5 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருதும் காசோலைகளும் வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய கார்த்தியின் தந்தை சிவகுமார், ‘நான் 10 மாதக் குழந்தையா இருக்கும் போதே அப்பா தவறிட்டாரு. அம்மா தான் விவசாய வேலை பாத்து என்னை ஆளாக்குனாங்க. பெண்கள் தான் அதிக விவசாய வேலைகள்ல ஈடுபடுறாங்க. அவங்களையும் தேர்வு செஞ்சி விருது கொடுக்குறது மகிழ்ச்சியா இருக்கு’ என்று கூறினார்.

இதுபோல் விவசாயம் மற்றும் விவசாயிகள் சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளையும், உதவிகளையும் செய்து வருவதால் ‘உழவன் நாள்’ எனும் ஹாஷ்டேகுகள் அவரின் ரசிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து பல படங்கள் தயாராகி வரும் நிலையில் இயக்குநர் ராஜுமுருகனுடனும் விரைவில் ஒரு படத்தை தொடங்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் வருகிறது. இந்நிலையில் அவரது அடுத்தடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என கூறி அவரின் பிறந்தநாளுக்கும் நியூஸ்7தமிழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.