#LubberPandhu படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ படம் வருகிற 18ம் தேதி சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட…

LubberPandhu, simplysouth, TamilCinema ,VarunChakaravarthy ,

தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ படம் வருகிற 18ம் தேதி சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளதை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : TNRainAlert | “பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை வீட்டுக்கு கொண்டு செல்லலாம்” – தமிழ்நாடு வெதர்மேன் கூறிய குட் நியூஸ்!

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 18ம் தேதி சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஆனால் இது இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் மட்டுமே ஓடிடியில் வெளியாகவுள்ளது என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் எப்போது ஓடிடியில் வரும் என தகவல் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.