மகளிர் டி20 உலககோப்பை | அரைஇறுதிக்கு முன்னேறிய #WestIndies

9-வது மகளிர் டி20 உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது. 9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய்…

West Indies have advanced to the semi-finals of the 9th Women's T20 World Cup League.

9-வது மகளிர் டி20 உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், நேற்றிரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீசும், இங்கிலாந்தும் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது.

இதையும் படியுங்கள் : அனைத்து பேருந்துகளும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயங்கும் – #Chennai போக்குவரத்துக் கழகம்!

தொடர்ந்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றி பெற்றது. ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகித்த போதிலும் ரன்ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீசும், தென்ஆப்பிரிக்காவும் முதல் இரு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. இங்கிலாந்து அணி வெளியேறியது. அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.