லயோலா கல்லூரி நிகழ்ச்சி; நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் பேச்சு

நெருக்கடியை சமாளிக்கும் திறனை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று லயோலா பிசினஸ் கல்லூரி நடத்திய நிகழ்ச்சியில் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் வலியுறுத்தினார். சென்னை லயோலா பிசினஸ் கல்லூரி…

நெருக்கடியை சமாளிக்கும் திறனை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று லயோலா பிசினஸ் கல்லூரி நடத்திய நிகழ்ச்சியில் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் வலியுறுத்தினார்.

சென்னை லயோலா பிசினஸ் கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் திறமைகளை வெளியில் கொண்டு வரும் வகையில் Chrysalis என்னும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு squid game என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அளவில் 450 குழுக்கள் கலந்து கொண்டன.

Chrysalis 22 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல், மேலாண்மை படிப்புகளை அனைத்து மாணவர்களும் கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என்று கூறினார். மேலும் நெருக்கடியான சூழல்களின் போது, அதனை எவ்விதம் எதிர்கொண்டு சமாளிப்பது குறித்த தெளிவின்மை தற்போதைய இளம் சமூகத்தினர் இடையே நிலவுவதையும் சுட்டிக்காட்டினார்.

Loyola College Chrysallis 22

இதனையடுத்து இது போன்ற போட்டிகளை மாணவர்களே ஒன்றிணைந்து நடத்துவதால் எதிர்காலத்தில் தொழில்முனைவோராக மாறும்போது தங்களுக்குப் பெரிதும் பயன்படுவதாக இதில் பங்கேற்ற கல்லூரி மாணவர் சதீஷ் பிரணவ் தெரிவித்தார். பின்பு வேலைவாய்ப்புக்காக ஒவ்வொரு நிறுவனங்களையும் அணுகும் போதும் அங்கு உள்ள சூழல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தும் முறைகளைத் தெரிந்து கொள்ள இது போன்ற போட்டிகள் பயன்படுகிறது என்றும் மாணவ பருவத்திலேயே போட்டிகளில் பங்கேற்று, நெருக்கடிகளைக் கையாளும் திறனை வளர்த்துக்கொண்டால் இன்னும் அதிக அளவில் தொழில்முனைவோர்களை உருவாகுவது எளிதாகிவிடும் என்றும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் உற்சாகமாகத் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.