தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒருபோதும் திமுக அரசு ஆதரிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு இல்லம் தேடி கல்வி சார்பில் 9-ஆம் ஆண்டு வீதி விருது விழா நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தனராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நடன இயக்குநர் சாண்டி, பாடகர் வேல்முருகன் மற்றும் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில், பேசிய எம்.பி கனிமொழி, பாரம்பரிய கலைகளையும், மக்களிசையையும் ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்ட சென்னை சங்கமம் நடைபெறவில்லை என்றாலும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது எனக்கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, அதிமுக ஆட்சியின்போது நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், வேளாண் சட்டங்களைத்தை திரும்ப பெற கோரியும், கடந்த முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக GO BACK மோடி எனக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
ஆனால், தற்போது மக்களுக்கு ஆதரவாக உள்ள திட்டங்களுக்கு தான், அரசு பிரதமரை வரவேற்கிறது என்றும், மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒருபோதும் இந்த அரசு ஆதரிக்காது எனவும் கனிமொழி தெரிவித்தார்.