பட்ஜெட் 2022: இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 4வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்…

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார்.

மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 4வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும், 2வது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இதில், பொருளாதாரம் சார்ந்த பல மேம்பாட்டு திட்டங்களை அவர் வெளியிட்டார்.

பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்:

  • கொரோனாவால் அனைத்து தரப்பு மக்களும் மனநலம் சார்ந்த பிரச்னைக்கு ஆளாகியுள்ளனர்.
  • தேசிய அளவில் மக்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க டெலி மருத்துவ வசதி உருவாக்கப்படும்.
  • நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் தரம் உயர்த்தப்படும்.
  • மகளிர் மேம்பாட்டிற்காக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • வீட்டிற்கே குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.
  • வட மாநிலங்களில் உள்ள எல்லைப்புற கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • எல்லைப்புற கிராமங்களில் சுற்றுலா, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • பிரதமரின் இ-வித்யா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி சேனல்களின் எண்ணிக்கை 12-லிருந்து 200 ஆக உயர்த்தப்படும்.
  • வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மத்திய அரசின் 1,486 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்
  • இன்னும் 25 ஆண்டுகளில் 50 விழுக்காடு மக்கள் நகர்புறங்களில் வசிப்பார்கள்
  • நகர்ப்புறங்களை மேம்படுத்தவும், திட்டங்களை வகுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவும்
  • 8-வது அட்டவணையில் இடம்பெற்ற மொழிகளில் நில ஆவணங்களை மொழிபெயர்க்க மத்திய அரசு உதவும்
  • நில ஆவணங்களை கணினிமயமாக்கி, ‘ஒரே நாடு – ஒரே பத்திரப்பதிவு’ திட்டம் ஊக்குவிக்கப்படும்
  • இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்
  • ராணுவ தளவாட உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும்
  • ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் 68 சதவீத நிதி உள்நாட்டு தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
  • ராணுவத்திற்கான ஆயுத இறக்குமதிகள் குறைக்கப்படும்.
  • எரிசக்தியை சேமிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.