நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: கத்தாரில் சிக்கி தவித்த தமிழர் மீட்பு

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக கத்தார் நாட்டில் கொத்தடிமையாக ஒட்டகம் மேய்த்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீட்கப்பட்டார். வெளிநாட்டில் வேலைக்கு சென்று கொத்தடிமையாக வாழ்வதன் கொடுமையைப் பற்றி உணர்வுப்பூர்வமாக பேசிய மலையாள நாவல்…

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக கத்தார் நாட்டில் கொத்தடிமையாக ஒட்டகம் மேய்த்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீட்கப்பட்டார்.

வெளிநாட்டில் வேலைக்கு சென்று கொத்தடிமையாக வாழ்வதன் கொடுமையைப் பற்றி உணர்வுப்பூர்வமாக பேசிய மலையாள நாவல் ஆடு ஜீவிதம். இது நடிகர் பிரித்வி ராஜின் நடிப்பில் திரைப்படமாகவும் வெளியானது.

அதே போன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காதர் முகைதீன். இவர் ஓராண்டுக்கு முன்பு கத்தார் நாட்டிற்கு ஓட்டுனராக வேலைக்குச் சென்றார்.

ஆனால், தன்னை ஒட்டகம் மேய்க்க விட்டு சித்திரவதை செய்ததாக அவர் கண்ணீர் விட்டு கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டது இதையடுத்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கத்தாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கத்தார் மண்டலம் மூலம் காதர் முகைதீன் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பனைக்குளம் கிராமத்தையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.