நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன்,…

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவுகிறது என கூறினார்.

ஆந்திர கடலோர பகுதி முதல் குமரி கடல் பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் அவர் கூறினார். .

கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் அறிவுறுத்தினார். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 56 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.