முக்கியச் செய்திகள் தமிழகம்

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை; தூத்துக்குடியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பிப்ரவரி 1ம் தேதி இலங்கை கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக
தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும்என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதை அடுத்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் நாட்டு படகு மற்றும்
விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்திலும் ஏராளமான நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து தொழில் செய்து வரும் நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் பலத்த காற்று வீசக்கூடிய பகுதி அல்லாமல் பாதுகாப்பான இடங்களில் தங்கி மீன்பிடித் தொழில் செய்ய மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர். தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடைசி நேரத்தில் சமரசம்; காங்கிரஸிலிருந்து விலகும் முடிவை கைவிட்ட கே.வி.தங்கபாலு?

EZHILARASAN D

அமைச்சர் வாகனத்தின் மீது காலணி வீசிய வழக்கு: மன்னிப்பு கோர உத்தரவு!

Arivazhagan Chinnasamy

குட்கா வழக்கு; தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

G SaravanaKumar