பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது குழந்தையின் முகத்தை முதன் முதலாக வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். பிரியங்கா சோப்ரா தனது மகளுடன் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் பிரபலமானவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆன நிலையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். குழந்தை பிறந்து ஓராண்டாக அவரது முகத்தை காட்டாமல் மறைத்து வந்த நிலையில் தற்போது முதல்முறையாக தனது குழந்தையை வெளி உலகத்துக்கு பிரியங்கா சோப்ரா அறிமுகப்படுத்தியுள்ளார்.
நிக் ஜோனஸ் சகோதரர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் தனது குழந்தையோடு பிரியங்கா சோப்ரா வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் நிக் ஜோனஸ் சகோதரர்களான கெவின் மற்று ஜோ கலந்து கொண்டனர். பிரியங்கா சோப்ராவின் மடியில் அவரது குழந்தை மால்டி உட்கார்ந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.








