உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி | #Tamilnadu-க்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: இன்று காலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் இந்த…

Low Pressure , heavy Rain , TamilNadu , TNrains, chennai, IMD

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

இன்று காலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையில் அடுத்த 2 நாட்கள் நிலவக் கூடும். இதன் காரணமாக வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள் : Refund பாலிசி முறையை மாற்ற வேண்டும்… பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும் – ஓலாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சென்னையில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 115.5 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 204.4 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 17ம் தேதி வரை சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள வடதமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது”

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.