சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னக ரயில்வே ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது சென்னை சென்ட்ரல் ‘அமைதி ரயில் நிலையமாக’ மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் இருக்காது என்றும் ரயில் தொடர்பான தகவல்களை காட்சிப்படுத்தல் மூலமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், மாற்றுத்திறனாளிகள் தரப்பில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி அறிவு கிடைக்கப் பெறாத மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தை அமைதியான நிலையமாக வைத்திருக்க செயல்படுத்தப்பட்ட நடைமுறைகள் திரும்ப பெறப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மீண்டும் ஒலிபெருக்கி அறிவிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.