முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

200ம் ஆண்டு தோள் சீலை போராட்டத்தின் நிறைவு பொதுக்கூட்டம்: 2 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு

நாகர்கோவிலில் இன்று 200-ம் ஆண்டு தோள் சீலை நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள  முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் தோள் சீலை அணியும் உரிமை கடந்த 1822-ம் ஆண்டு தொடங்கிய தோள் சீலை போராட்டம் வாயிலாக கிடைத்தது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் அய்யா வைகுண்டரும், கேரளாவில் நாராயண குருவும், சீர்திருத்த கிறிஸ்துவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட் உள்ளிட்டோர் போராடி தீர்வுகண்டனர். இந்த போராட்டம் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு மாநாடு இன்று நடைபெற்றது.

நாகர்கோவிலில் நாகாராஜா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய்வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும், தமிழகம் மற்றும் கேராளவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்த மாநாட்டில் 2 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதால் நாகர்கோவிலில் டி.ஜ.ஜி. பிரவேஷ் குமார், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாநாட்டையொட்டி இன்று அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 2500-க்கும் மேற்பட்டோர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேட்பாரற்ற நிலையில் வள்ளுவர் கோட்டம்; எ.வ.வேலு

G SaravanaKumar

ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணமடைந்த மேஜர் ஜெயந்த்..!

Web Editor

சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?-அமைச்சர் மெய்யநாதன் பதில்

Web Editor