எல்லா நேரமும் என்னோடு உறுதியாக நின்றவர் சுதாகர். எனது நீண்ட கால நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் தனது கட்சி நிர்வாகியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாநில நிர்வாகியான சுதாகர் உடல் நல குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

”சுதாகர் எனது நீண்ட கால நல்ல நண்பர். எல்லா நேரமும் என்னோடு உறுதியாக நின்றவர். என் மீது அதீத அன்பும் பாசமும் கொண்டவர். அவர் நீண்ட நாட்களாகவே உடல் நல குறைவால் அவதியுற்றார். அவரது உடல் நிலை குணம் பெற வேண்டி அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டோம். இறுதியில் அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரது குடும்பத்தார்க்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் “ சுதாகரோடு பயணித்த நினைவுகள் ஏராளமாக உள்ளன. எப்போதும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென என்னை பற்றியே ஆலோசித்தவர் சுதாகர்” என தெரிவித்தார்.







