நாமக்கல் அருகே சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து, லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல், கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடிகளை லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் நாமக்கல்லை அடுத்த எம்.ராசாம்பாளையம் சுங்க சாவடியை லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி விவசாய சங்கத்தினரும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நலிவடைந்து வரும் லாரி தொழிலைக் காப்பாற்ற வேண்டும், சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
—ரூபி







