அய்யனார் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் அருகே பரளி சேரிகாத்த அய்யனார் கோயில், பங்குனி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் அருகே உள்ள மலைக்குடிபட்டி கிராமம் பரளி சேரிகாத்த…

புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் அருகே பரளி சேரிகாத்த அய்யனார்
கோயில், பங்குனி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் அருகே உள்ள மலைக்குடிபட்டி கிராமம்
பரளி சேரிகாத்த அய்யனார் கோயிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டு
வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை,தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை
மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 16 ஜோடி மாட்டு வண்டிகள்
கலந்து கொண்டன.

இந்த போட்டி பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றன. மேலும்,
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 6 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு
வண்டி பந்தயத்தில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு
வண்டிக்கு 12 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு 9 கிலோமீட்டர் தூரமும்
எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் சாலையில் துள்ளிக்குதித்தும்,
ஒன்றையொன்று‌ முந்திச்சென்றும், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக
அமைந்தன. மேலும், சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் ஏராளமான பொதுமக்கள்
போட்டியை கண்டு ரசித்தனர். மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை
பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு, ரொக்கப் பணம் மற்றும் வெற்றிக்கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.