சென்னை மதுரவாயல் அருகே பைபாஸ் சாலையில் 50 டன் ரசாயன கலவை ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
சென்னை மீஞ்சூரில் இருந்து கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி சாம்பல் ரசாயன கலவையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தாம்பரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரி மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த போது, திடீரென டயர் வெடித்தது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
இதில் லாரி ஓட்டுநரான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ், சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து காரணமாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இத்தகவலை அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.
விபத்துக்குள்ளான லாரியில் 50 டன் கலவை இருந்ததால்லாரியை அப்புரப்படுத்துவதில் சிரமம் இருத்ததையடுத்து, ராட்சத கிரேன் உதவியுடன் லாரி அகற்றப்பட்டப்பட்டது.
—சௌம்யா.மோ







