டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக, எப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள 20 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 2 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள 20 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
எப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ளவர்கள், வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் அவர்களது பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







