இளம் இசையமைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மஜ்ஜா என்ற இணையதளத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி உள்ளார்.
INDEPENDENT MUSIC எனப்படும் தனி குழுக்களின் இசையை ஊக்குவிக்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் மஜ்ஜா என்ற இணையதளத்தை அவர் தொடங்கி உள்ளார்.

அந்த தளத்தில் தனி குழுக்களின் பாடல்களை வெளியிடலாம் என ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் யாழ் என்ற சர்வதேச இசை திருவிழாவை நடத்த உள்ளதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.







