சசிகலாவுக்கு உயர்பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக முதன்மை செயலாளர் மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் மனு அளித்திருந்தார். அந்த மனு பரிசீலனையில் உள்ள நிலையில், கர்நாடகா முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அவர் புதிய மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், சசிகலாவுக்கு உள்துறை அமைச்சகம், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கும் வரை, கர்நாடக அரசும், தமிழக அரசும் அவருக்கு உயர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது







