கோவிட்- 19 தொற்றால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் கொரோனாவின் அறிகுறிகள் நீங்குவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
கோவிட்- 19 தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு தடுப்பூசி உருவாக்கப்பட்டு, தற்போது உலக முழுவதிலும் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீண்ட காலமாக கோவிட் -19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இப்பரிசோதனையில் சிலருக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு கோவிட் 19 அறிகுறிகள் குறைந்துள்ளதாகவும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எரியானா ஐசின்பெர்க் என்ற பெண்மணி கொரோனா தொற்றால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்திய 36 மணி நேரத்தில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கெஸ் மெடின்ஜெர் என்ற பத்திரிகையாளர், கொரோனா பாதித்த 473 பேரிடம் ஆய்வு நடத்தியதில், கொரோனா தடுப்பூசி போடுவதால் மூன்றில் ஒருவருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.
இதுபோல் நீண்ட காலாமாக கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருக்கின்றனர் என்றும் இதற்கான பிரத்தியேக காரணங்களை கண்டறிய முடியவில்லை என்றும் ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.







