விஜய்யின் ‘லியோ’ – புதிய புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு தளத்திலிருந்து லோகேஷ் பகிர்ந்துள்ள இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு தளத்திலிருந்து லோகேஷ் பகிர்ந்துள்ள இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடித்துவரும் படம் ‘லியோ’. இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி சேர்ந்துள்ளதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். முழுவதும் லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் உருவாகும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோவின் ப்ரோமோ  கடந்த வாரம் வெளியிடப்பட்டு சமூக ஊடகங்களில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

அண்மைச் செய்தி:விபத்துக்குப் பிறகு முதல் முறையாக புகைப்படம் பகிர்ந்த ரிஷப் பந்த்

படப்பிடிப்பு தளத்திலிருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கதில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் நடிகர் விஜய், இயக்குனரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன், படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்ஹம்சா, அன்பறிவு மாஸ்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.