விபத்துக்குப் பிறகு முதல் முறையாக தனது புகைப்படத்தை பகிர்ந்த ரிஷப் பந்த்

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கார் விபத்துக்குப் பிறகு முதன்முறையாக தனது புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான  ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் மாதம்…

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கார் விபத்துக்குப் பிறகு முதன்முறையாக தனது புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான  ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து காரில் புறப்பட்டு  உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு தனி நபராக வந்தார்.  அதிகாலையில் அவர் வந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. சிறு பள்ளத்தை தவிர்க்க காரை திருப்பியபோதுதான், கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த அவர், ஹரியானா அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் டெஹ்ராடூன் மருத்துவமனையில் ரிஷப் பந்த்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, விமானம் மூலமாக மும்பையில்  உள்ள  கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. நீண்ட நாள் மருத்துவமனையில் இருந்த ரிஷப் பந்த் கடந்த ஜனவரி மாதம் ட்வீட் செய்திருந்தார். அதில், தனது காயங்களிலிருந்து மீண்டு வருவதாக ரிஷப் பந்த் கூறியிருந்தார்.

அண்மைச் செய்தி:தெற்கின் சாதனையை மும்பை வீரர்களால் பாராட்ட முடியாது – மஞ்சரேக்கருக்கு முரளி விஜய் பதிலடி

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை ரிஷப் பந்த் வெளியிட்டுள்ளார். கால் பலத்த காயமடைந்திருப்பது இந்த புகைப்படத்தில் தெரிகிறது. தனது காலை ஒரு அடி முன்னெடுத்து வைப்பது போல் அந்த புகைப்படம் உள்ளது. இந்தப் படத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து நலமுடன் விரைவில் திரும்புமாறு கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.