நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக தலைமையிலான கூட்டணியில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து…

திமுக தலைமையிலான கூட்டணியில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது.  இதனால் கூட்டணி,  தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர்,  நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்றது.  இந்நிலையில் இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் திருப்பூரில் மீண்டும் சுப்பராயன் போட்டியிடுவதாகவும்,  நாகப்பட்டினத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் போட்டியிடுவதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.