வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அதனை கட்டுப் படுத்த, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் நடைமுறையில்…

தமிழ்நாட்டில் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அதனை கட்டுப் படுத்த, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19 ஆம் தேதி முடிவடையும் நிலையில், தளர்வுகளுடன் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பிலும் சில விஷயங்களுக்கான தடையும் சிலவற்றுக்கும் அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறாப்பட்டிருப்பதாவது:

தடைகள்:

புதுச்சேரி தவிர, மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத் துக்கு தடை தொடர்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து. திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுப்போக்கு, விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றுக்கான தடை தொடர்கிறது.

அனுமதி:

தட்டச்சு – சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் செயல்பட அனுமதி.

பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிப்புரியலாம். .திருமணங்களில் 50 நபர்களுக்கும், இறுதிச் சடங்குகளில் 20 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி.

நோய்க்கட்டுப் பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.