கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் மலை உச்சியில் சந்திரசூடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஓசூரில் காவல் தெய்வமாக கருதப்படும் இக்கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
அதன் படி இந்த ஆண்டு தேர் திருவிழாவானது நாளை மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள்.
இந்த நிலையில் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், இதை ஈடுகட்டும் வகையில் வருகிற 14-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.







