காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி!

திருவள்ளூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கண்ணிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் எதிர்பாரா விதமாக அம்மோனியா நச்சு வாயு கசிந்தது. இந்த விபத்தில் சிக்கிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் முழுமையாகக் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.