சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த நடிகர் அஜித் “ஏகே 61” படப்பிடிப்பிற்காக வெளிநாடு புறப்பட்டு சென்றார்.
வலிமை படத்தைத் தொடர்ந்து, அஜித், போனி கபூர், எச்.வினோத் கூட்டணி ஏகே 61இல் இணைந்துள்ளது. இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து கிரைம் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. திட்டமிட்டபடி படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதால் தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், AK61 படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து வெளிநாடு புறப்பட்டுச் சென்ற நடிகர் அஜித், சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தபோது அவரிடம் செல்பி எடுப்பதற்காக ஒரு பெண் கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்து அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அஜித் உள்ளே சென்றபோது சிஐஎஸ்எப் அதிகாரிகள் அவரை முழுமையாக சோதனை செய்வதற்கு ஒப்புக்கொண்டு சோதனையும் செய்துகொண்டார். அதைத்தொடர்ந்து, வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்.
-ம.பவித்ரா