முக்கியச் செய்திகள் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை; ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை

நடந்து முடிந்து உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும்பாலானோர் வெற்றி பெற்றனர். இதையடுத்து நடந்து முடிந்து உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல இடங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவினர் அனுமதிக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

பத்திரிகையாளர்களையும் துச்சமென்ன மதிக்கும் திமுக அரசு தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காக தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி உள்ளாட்சி தேர்தலில் வெற்றிகளை பெற்றுள்ளதாக சாடினர். திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றி என்பதை கண்டிப்பாக சட்டத்தின் முன், ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்தி காட்டுவோம் என கூறியுள்ளனர்.

எந்த நிலை வந்தாலும், இந்த நிலை மாறாது என்று அதிமுகவிற்காக பணியாற்றிய தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர். திமுகவிற்கு எங்கள் ஓட்டு எக்காலத்திலும் இல்லை என நினைத்து இரட்டை இலைக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்ளவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

இன்று முதல்வர் பொறுப்பேற்கிறார் பினராயி!

Hamsa

ம.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்

Ezhilarasan

மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

Niruban Chakkaaravarthi