உலகக்கோப்பை இந்திய அணியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சர்துல் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியானது வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 17ம் தொடங்க உள்ளது. வரும் 17ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் கடந்த மாதம் பிசிசிஐ அறிவித்திருந்தது.
ஐபிஎல் முடிந்த பின்னர் வீரர்களின் பட்டியலில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை அணிக்காக விளையாடி வரும் சர்துல் தாகூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் அக்ஷர் படேலுக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடும் சர்துல் தாகூர் 18 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
🚨 NEWS 🚨: Shardul Thakur replaces Axar Patel in #TeamIndia‘s World Cup squad. #T20WorldCup
More Details 🔽
— BCCI (@BCCI) October 13, 2021








