உள்ளாட்சித் தேர்தலில் இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், விரைவில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்பது உறுதி என தெரிவித்தார். கூட்டணிக்கு வருபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக்கூறிய அவர், இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தமிழக, பாண்டிச்சேரி நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் கட்சி வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினோம். pic.twitter.com/qFzpSLMwLL
— Kamal Haasan (@ikamalhaasan) August 26, 2021
உள்ளாட்சி தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்றும், கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். .








