ரஷ்யாவில் பைக் பயணம்.. ’தல’ அஜித்தின் தாறுமாறு திட்டம்

அஜித் நடிக்கும்ன் ’வலிமை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடி வடைந்த நிலையில், அஜித் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. நடிகர் அஜித் இப்போது ’வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இதில்…

அஜித் நடிக்கும்ன் ’வலிமை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடி வடைந்த நிலையில், அஜித் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

நடிகர் அஜித் இப்போது ’வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகை ஹூமா குரேஸி ஹீரோயினாக நடிக்கிறார். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், சேஸிங் காட்சி ஒன்று படமாக்க வேண்டி இருந்தது. இந்த காட்சியை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டு இருந்தனர்.

கொரோனா காரணமாக அதற்கான வாய்ப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலை யில் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றனர். அங்கு பிரம்மாண் டமான சேஸிங் காட்சியை 10 நாட்கள் படக்குழு படமாக்கியது. அதை முடித்துவிட்டு அனை வரும் திரும்பிய நிலையில், நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் ரஷ்யாவிலேயே தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த அஜீத், அந்நாட்டில் சுமார் 5000 கிலோமீட்டர் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே ரஷ்ய பைக் வீரர்கள் சிலரை சந்தித்து ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் ரஷ்யா வில் உயர் ரக பைக்குடன் அஜித் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளி யாகி வருகின்றன.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன், சிக்கிம் வரை, சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் அஜித் பைக்கில் சென்றுவந்தார். இப்போது, ரஷ்யாவில் 5000 கி.மீ வரை பயணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.