அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக் கடைகள் மூடப்படுகிறதா? – அதிகாரிகள் உறுதி செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறதா…? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட…

அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறதா…? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட அளவிலான அனைத்து துணை கலால் பிரிவு ஆணையர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்யப்படும் மெத்தனால், உரிய முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என கூறினார்.

டாஸ்மாக் கடைகள், மதுபான உரிமம் பெற்ற கிளப், மதுபான உரிமம் பெற்ற ஹோட்டல், ஆகியவைகளை கண்காணித்து, விதிமுறைகள் ஏதேனும் மீறி இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறதா…? என்பதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.