முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக-வுடன் இணைப்பு – சசிகலா உறுதி

அதிமுகவுடன் இணைவது உறுதி என்றும் அடுத்த ஆட்சி தங்களுடைய ஆட்சி என்றும் வி.கே.சசிகலா உறுதிபட தெரிவித்துள்ளார்.

 

சிவகங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் மக்கள் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வருகிறார்கள் என்றும் மக்களுக்காக எந்த நல்லதும் திமுக செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மத்திய அரசு மீது குறைகூறுவது மட்டுமே வேலை இல்லை என்ற அவர், வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும் திமுக குறித்து சாடினார். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதியை இந்த அரசு கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்றார். அதிமுகவுடன் இணைவது நிச்சம் நடக்கும் என தெரிவித்த வி.கே.சசிகலா அடுத்த ஆட்சி எங்களுடைய ஆட்சி என்றும் மக்களுடைய ஆட்சியாக இருக்கும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

 

அதிமுகவுடன் சசிகலா இணைவது குறித்து தொடர்ந்து செய்திகள் பரவி வரும் நிலையில், சசிகலா மீண்டும் மீண்டும் தன் இணைப்பு குறித்து உறுதி பட தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் அதிமுகவை சேர்ந்த யாரும் சசிகலா இணைப்பு நடக்காது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே,, அதிமுகவுடன் சசிகலா இணைப்பு எப்போது நடக்கும் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒட்டு மொத்த நாட்டிடமும் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

G SaravanaKumar

“முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்”: உத்தவ் தாக்ரே

Halley Karthik

சென்னை மலர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்

G SaravanaKumar