திமுக – காங்கிரஸ் கூட்டணியை போல, முதலமைச்சரின் பேச்சும் முரண்பாடாக உள்ளது: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை

திமுக – காங்கிரஸ் கூட்டணியை போல, முதலமைச்சரின் பேச்சும் முரண்பாடாக உள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் மீதான விளக்கக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

திமுக – காங்கிரஸ் கூட்டணியை போல, முதலமைச்சரின் பேச்சும் முரண்பாடாக உள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் மீதான விளக்கக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும், எமர்ஜென்ஸி காலத்தை தமிழகத்தின் இருண்டகாலம் எனக்குறிப்பிடும் முதலமைச்சர், தனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு எமர்ஜென்ஸியை ஏற்படுத்திய அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் பேரனான, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்திருப்பது நகைச்சுவையை ஏற்படுத்துவதாக விமர்சனம் செய்தார்.

அண்மைச் செய்தி: பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை – அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மேலும், திமுக – காங்கிரஸ் கூட்டணியின் முரண்பாடு போல, முதலமைச்சரின் பேச்சும் முரண்பாடாக உள்ளதாக கூறிய அவர், இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி பேசாமல், ராகுல் காந்தி உண்மையை மட்டும் பேச வேண்டும் எனவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.