“சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே அன்புக்கரங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் பயணடைந்த மாணவ, மாணவிகளின் வீடியோக்களை பகிர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே அன்புக்கரங்கள்!

இத்தகைய மகிழ்ச்சியை மற்ற குழந்தைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வழங்கிட வேண்டும்!

“சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.