முக்கியச் செய்திகள் தமிழகம்

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்தவர் வினோதினி என்பவர் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்த அந்தோனி ஜெகனும் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வினோதினியை, அவரது பெற்றோர், தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கதிரவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். தம்பதியர் சென்னையில் வசித்து வந்த போதும், வினோதினிக்கும் அந்தோனி ஜெகனுக்கும் உள்ள உறவு தொடர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், கடந்த 2018 அக்டோபர் 12ம் தேதி கணவன் கதிரவனை திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்ற வினோதினி, அங்கு கண்ணை துணியால் கட்டி கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடியுள்ளனர். கதிரவன் கண்ணை கட்டிக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடியபோது ஏற்கனவே வினோதினியால் வரவழைக்கப்பட்ட அந்தோனி ஜெகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கதிரவனை வெட்டியுள்ளார். இதனால் நிலைகுலைந்து கதிரவன் கீழே விழுந்தவுடன் அந்தோனி ஜெகனிடம் தனது தாலியை கழற்றி கொடுத்து அங்கிருநது ஓடிவிடும்படி வினோதினி கூறியுள்ளார்.

அந்தோனி ஜெகனும் தப்பி ஓட, தனது தாலியை பறித்து கொண்டு கணவனை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிவிட்டதாக வினோதினி சத்தம் போட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் கதிரவனை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கதிரவன் இறந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் கடற்கரையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது வினோதினியும், அவரது காதலனும் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் கொலை மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்க மாரியப்பன், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாக கூறி, வினோதினி மற்றும் அந்தோனி ஜெகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த சபாநாயகர்கள்!

Vandhana

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Nandhakumar

சொந்த வீட்டிற்கு வருவது போல் சாவகாசமாக வந்து கொள்ளையடித்த நபர்கள்

EZHILARASAN D