தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’வாத்தி’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகி வருகிறது. தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இப்படம், தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. வாத்தி படத்தில், சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படத்தின், போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகிய நிலையில், அண்மையில் முதல் பாடலான ’வா வாத்தி’ வெளியானது. தனுஷ் மற்றும் ஸ்வேதா மோகன் குரலில் உருவான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேறபைப் பெற்று வருகிறது. யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.
’வாத்தி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இப்படம் வெளியாகும் தேதியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதன்படி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இறுதியாக தனுஷ் நடித்து வெளியான ’நானே வருவேன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் வாத்தி திரைப்படமும் வெற்றியடையும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.