சென்னை அருகே வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகளை உயிரை பணயம் வைத்து மீட்டவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கம் பகுதி தொடர் மழையால் வெள்ளக்காடானது. இந்நிலையில், அயனம்பாக்கம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து இரவு முழுவதும் நாய்க்குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டது.
இதனால், நாய்களுக்கு என்ன ஆனதோ என்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி தவித்த அப்பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் ஆனந்த், காலையில் எழுந்தவுடன் நாய்க்குட்டிகள் கத்தும் பகுதிக்கு சென்றார். இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று பார்த்த போது, அங்கு 5 நாய்க்குட்டிகள் தவிப்பதை கண்டார்.
பின்னர் கையில் எடுத்துச் சென்ற அட்டைப் பெட்டியில் 5 நாய்க்குட்டிகளையும் வைத்துக் கொண்டு கரை திரும்பினார். நாய்க்குட்டிகளை மீட்டதோடு, அவற்றுக்கு உணவளித்து பராமரித்து வருகிறார். உணவுக்கு தவித்த நாய்க்குட்டிகள் மீது எலெக்ட்ரீஷியன் ஆனந்த் காட்டியிருக்கும் அக்கறையும், பாசமும், காண்போரை நெகிழ வைப்பதாக உள்ளது.
Advertisement: