வேளாண்மைத்துறை செயலாளராக இருந்த ககன் தீப்சிங் பேடி ஐஏஎஸ் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த ககன் தீப்சிங் பேடி ஐஏஎஸ் புதிய சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வரும் நிலையில், பெருநகர மாநகராட்சி ஆணையரை மாற்றி தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், ககன் தீப்சிங் பேடி பேரிடர் காலங்களில் செயலாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.







