கல்லூரி கனவு நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், 12-ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் இன்றியமையாதது. மாணவர்களுக்குக் கிடைக்கும் பல்வேறு விருப்பத்தேர்வுகள், தேர்வு செய்ய வேண்டிய கல்லூரிகள், தொடர வேண்டிய படிப்புகள், நுழைவுத் தேர்வுகள், கல்விக் கடன்கள் மற்றும் உதவித்தொகைகள் பற்றிய வழிகாட்டுதலை வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. கல்லூரி கனவு நிகழ்ச்சியும் அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகும். அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி கனவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், சட்டம், கால்நடை மருத்துவம், விவசாயம், வங்கிக் கடன்கள், உதவி மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட ஒவ்வொரு அமர்வுகளும் 45 நிமிடங்கள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ள அவர், அமர்வுகளுக்கான பேச்சாளர்கள் நிகழ்விற்கான குழுவால் ஏற்பாடு செய்யப்படுவார்கள். ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்பு எண் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது, நிகழ்வை வெற்றிகரமாக ஒழுங்குபடுத்தத் தனிப்பட்ட கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘’அதிமுகவிற்கு ஒற்றை தலைமை இருப்பது தான் நல்லது’ – திருநாவுக்கரசர் எம்.பி’
நிகழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், விளம்பரம் மேற்கொள்ள வேண்டும். பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள், வழங்கப்படும் படிப்புகள் மற்றும் வங்கிக் கடன்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதற்கு ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். கல்லூரி கனவு வழிகாட்டுதல் கையேடுகளை அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கப் பள்ளிக் கல்வி ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அமைச்சர்களுடன் நிகழ்ச்சித் தொடக்க விழாவை ஒருங்கிணைக்க வேண்டும். உங்கள் மாவட்டத்தில் உள்ள சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளையும் பகிர்ந்து கொள்ளலாம். நிகழ்ச்சியின் வெற்றி ஆட்சியரின் ஈடுபாட்டைப் பொறுத்தது. விழா சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.