மகாராஷ்ட்ர அரசியலோடு தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவின் சிவ சேனாவைச் சேர்ந்த 37 எம்எல்ஏ-க்கள், 7 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் என 44 பேர் தற்போது, அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிவ சேனா மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அவர்கள் தனி அணியாக உருவெடுத்திருப்பதால், மகாராஷ்ட்ர அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது.
மகாராஷ்ட்ர அரசியலில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடிக்கு பாஜகவே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.
அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், மாநில முதலமைச்சர் மகாராஷ்ட்ர அரசியலோடு விளையாடிக் கொண்டிருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, குவஹாத்தியில் மகாராஷ்ட்ர எம்எல்ஏ-க்கள் தங்கி இருப்பதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா, யார் வேண்டுமானாலும் அஸ்ஸாமில் தங்கி இருக்க முடியும் என தெரிவித்தார்.
அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதற்காக அனைத்து நட்சத்திர விடுதிகளையும் மூடிவிட வேண்டுமா என கேள்வி எழுப்பிய அவர், வெளிமாநிலத்தவர்கள் வருவதால் அஸ்ஸாமின் பொருளாதாரத்திற்கு நல்லதுதான் என்பதால் அவர்களை வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.