நாமக்கல்லில் திடீரென முட்டை விலை உயர்ந்து 535 காசுகளாக நிர்ணணம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகத்தின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
நாமக்கல் மாவட்ட முட்டை பண்ணைகளில் கடந்த மாதம் 4.50 காசுகள் இருந்த முட்டை விலை 25 காசுகள் அதிகரித்து 4.75 காசுகள் ஆனது. பின்னர் அடுத்த சில வாரங்களில் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து 1.10 காசுகள் அதிகரித்தது.
இந்நிலையில், நாமக்கல்லில் முட்டை விலை இன்று வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.20 லிருந்து 15 காசுகள் உயர்த்தி ரூ.5.35ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் முட்டையின் விலை ரூ.5.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் முதல் முட்டை விலை தொடர்ந்து உயர்நது வருவது குறிப்பிட்டத்தக்கது.
இதனால் உணவகங்களில் ஆம்பளேட் மற்றும் முட்டை சார்ந்த உணவு பொருட்களின் விலை உயரும் அபயாம் ஏற்பட்டுள்ளது. மேலும் முட்டை விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.








