ரஷ்யாதான் முழுப் பொறுப்பு: ஜோ பைடன் காட்டம்

ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், உக்ரைன் தன்னைத் தானே பாதுகாத்து கொள்ளும் என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.   ரஷ்யா அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்குமாறு…

ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், உக்ரைன் தன்னைத் தானே பாதுகாத்து கொள்ளும் என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யா அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்குமாறு உத்தரவிட்டிருக்கும் நிலையில் அந்த நாட்டின் மீதான போர் தொடங்கியிருக்கிறது. சக்தி வாய்ந்த குண்டுகள் ரஷ்யாவிலிருந்து சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறது. கியோவ், ஒடேசா, கார்கிவ், மைக்கோலை, மரியுபோல் போன்ற உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களின் மீது ரஷ்யா தற்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் “மக்கள் யாரும் பயம்கொள்ள வேண்டாம் என்றும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் போருக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் இது ஆக்கிரமிப்பிற்கான போர் எனத் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும். “ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்” எனத் தெரிவத்துள்ளார்.

ரஷ்யா போர் தொடங்கியிருக்கும் இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , “ போரால் ஏற்படும் உயிர் பலி, இதர விபரீதங்களுக்கும் ரஷ்யாதான் முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனின் கூறியதை அடுத்து. உக்ரைன் நாட்டின் பொது மக்களின் மீது தாக்குதல் நடத்த வில்லை, இது ஒரு இராணுவ நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கி “நாங்கள் தாக்குதல் நடத்த விரும்பவில்லை, எங்களை நாங்கள் பாதுகாத்து கொள்ள விரும்புகிறோம் , ரஷ்யாவின் கொள்கைகளுக்கு உக்ரைன் அடிபணியாது” என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.