உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. ஆயுதங்களை கீழே போடுங்கள் என ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பல வருடங்களாக உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் மோதல் போக்கு நிலவியது. நேட்டோ படை விசயத்தில் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்தது. சமீப நாட்களாக இந்த மோதல் போக்கு உச்சத்தை அடைந்தது. போர் நடக்காமல் இருக்க பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போர் நடப்பது உறுதியானதற்கு ஆதாரமாக ரஷ்ய படையானது உக்ரைனின் எல்லைக்கு 20 கீலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்ட செயற்கை கோள் படங்கள் வெளியானதை அடுத்த உலக நாடுகள் உச்சகட்ட பரபரப்பை அடைந்தன. இந்த நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார். மேலும் ஆயுதங்களை கீழே போடுமாறு உக்ரைனுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
தற்போது ரஷ்யா , உக்ரைன் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் எல்லைப் பகுதியிலிருந்து பயங்கரமான வெடிகுண்டுகளை வீசி வருகின்றது. உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மத்திய அரசு ஏற்கனவே நாடு திரும்பச் சொல்லி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் , தற்போது தமிழ் நாடும் உக்ரைன் வாழ் தமிழர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. உக்ரைன் வாழ் தமிழர்கள் உதவிக்காக தமிழ்நாடு அரசு அலைப்பேசி எண்ணை வெளியிட்டுள்ளது. 044-28515288 ,96000 23645 ,99402 56444 உக்ரைனில் இருந்து வெளியேறவும், பிற உதவிகளுக்கு இந்த எண்ணை அனுகுமாறு தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.